திருமால் இந்துக்கடவுள் திருமால் என்பவர் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளாக அறியப்பெறுகிறார். இவர் விஷ்ணு, கேசவன், பெருமாள், வாசுதேவன் என்றும் அறியப்பெறுகிறார். தமிழர்களின் முல்லைநிலத் தெய்வமாக வணங்கப்பட்ட மாயோன் தெய்வமாக திருமால் அறியப்பெறுகிறார். சங்ககாலத் தமிழ்ப்பாடல்களில் மாயோன் வழிபாடு பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. மால், மாலன், மாலவன், பெருமால் என்றும் அறியப்பெறுகிறார். சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் என்ற பஞ்சாயுதங்களை கொண்டவராகவும், பாற்கடலில் திருமகளுடன் ஆதிசேசனின் படுக்கையில் படுத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.[1] இவருடைய வாகனமாக கருடனும், அருவ வடிவமாகக் சாளக்கிராமம் கருதப்படுகிறது. திருமால்  திருமால்-நான்கு கரங்களுடன் அதிபதி காத்தல் தேவநாகரி विष्णु சமசுகிருதம் viṣṇu வகை மும்மூர்த்திகள் இடம் வைகுந்தம் ஆயுதம் சங்கு, சக்கரம், வில் மற்றும் கதாயுதம் துணை இலக்குமி  பூதேவி மற்றும் ஸ்ரீதேவியுடன், நாபிக் கமலத்தில் பிரம்மனுடன் கூடிய மகாவிஷ்ணுவின் பஞ்சலோக சிலை  தியான நிலையில் நான்கு கைகளுடன் கூடிய விஷ்ணுவின் சிற்பம், அரசு அருங்காட்சியகம், மதுரா இந்துக்கோவ...