Posts

கல்லூரி நாடகம்

Image
எங்கள் கல்லூரியில் துறைவாரியாக மாணவிகளின் நாடகம் அரங்கேற்றப்பட்டு பரிசளிக்கப்பட்டது..

நெடுநல்வாடை

Image
நெடுநல்வாடை   எழுத்தாளர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப்  பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை  என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு)  வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை  எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர். இது ஒரு புறப்பொருள்  நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள்  அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ்ப் புலவர்(கள்) தம் அகப் பாடல்களில் தலைவன் தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை அகிலமே அறியச்செ...

யோகா

யோக வழியில் வாழ்க்கை! யுஜ் என்னும் சமஸ்கிருத சொல்லில் இருந்த வந்த யோகா என்னும் சொல்லுக்கு, தனிப்பட்டவரின் நனவுநிலை அல்லது ஆன்மா, பிரபஞ்ச சக்தியுடன் இணைதல் என்று அர்த்தம். யோகா என்பது இந்தியாவின் 5000 ஆண்டு பழைமை வாய்ந்த உடல் சார்ந்த அறிவு. யோகா என்பதைப் பலர், உடல் வளைதல், திரும்புதல், நீட்டுதல், மூச்சினை எடுத்து விடுதல் என சிக்கலான உடற்பயிற்சி என்று நினைக்கக்கூடும், இவையனைத்தும், உள்ளிருக்கும் மனித மனதின் ஆன்மாவின் எல்லையற்ற சக்தியைத் திறந்து திறனை அதிகரிக்கும் ஆழமான அறிவியலைப் பற்றிய மேலோட்டமான கருத்துகள். யோகா என்பதே, தன்னுள் எப்படி வாழ வேண்டுமெனும் வாழ்க்கையின் சாரத்தைப் பொதிந்து வைத்திருக்கும் அறிவியல் ஆகும் – ஞான யோகம் – ஞான தத்துவ மார்க்கம், பக்தி யோகம் – பக்தி வழியில் பேரின்பம், கர்ம யோகம் – செயல்களின் பாதை, ராஜ யோகம் – மனதைக் கட்டுக்குள் வைக்கும் மார்க்கம். ராஜ யோகம், எட்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ராஜ யோக அமைப்பின் மையப்பகுதி என்பது, இவை அனைத்தையும் பல வழிகளில் சமன் செய்து இணைக்கும் யோக ஆசனப் பயிற்சியாகும். ஸ்ரீ ஸ்ரீ யோகா மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள்,...

கோவிலில் மணி அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம்...!!

Image
         கோவிலுக்குள் மணி அடித்துவிட்டு வணங்குவது ஏன் தெரியுமா?               கோவிலில் மணி அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம்...!!   கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது. கோவிலில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது கொடுத்து கேட்பார் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளது என சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். கோவிலுக்கு செல்லும் அனைவரும் மணி அடிப்பது ஏன்?  பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உள்ள மணி ஓசையின் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது. கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்பார் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் அது உண்மை அல்ல.  ஆகம சாஸ்திரங்களின் படி, கோவில் மணியில் இருந்து வெளிப்படும் ஓசை எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது. ...

காலந்தோறும் காதல்- vairamuthu kavithai

காலந்தோறும் காதல் 1. சங்க காலம் ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு குருகு பறக்கும் தீம்புனல் நாடன் கற்றை நிலவு காயும் காட்டிடை என்கை பற்றி இலங்குவளை ஞெகிழ்த்து மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து வாட்கண் மயங்க உண்டதை மீண்டும் பசலை உண்ணும் பாராய் தோழி * * * * * 2 காவிய காலம் பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார் மின்னல் மிடைந்த இடையென்பார் - இன்னும் கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில் கரும்பிருக்கும் என்பார் கவி. * * * * * 3 சமய காலம் வெண்ணிலவால் பொங்குதியோ விரக்தியால் பொங்குதியோ பெண்ணொருத்தி நான்விடுக்கும் பெருமூச்சாற் பொங்குதியோ பண்ணளந்த மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால் விண்ணளந்து பொங்குதியோ விளம்பாய் பாற்கடலே! * * * * * 4 சிற்றிலக்கியக் காலம் தூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள் - மனம் துள்ளி ஓடும்விழிக் கெண்டையாள் - நெஞ்சைத் தாக்கி மறுநொடியில் தவிடுபொடியாக்கும் சண்டையாள் - வெள்ளித் தண்டையாள் முலை அதிரும்படி மணி உதிரும்படி மனம் பதறும்படிஆடும் பாவையாள் - வில் மாரன் பகைமுடிக்கத் தேவையாள் * * * * * 5 தேசிய காலம் சின்னஞ் சிறுகமலப் பூவினாள் - என் சித்தத்திலே வந்து மேவினாள் கண்ணில் ஜோதி...

முதன் முதலாய் அம்மாவுக்கு- vairamuthu kavithai

முதன் முதலாய் அம்மாவுக்கு ஆயிரந்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய் சொன்னேன் பெத்தவளே ஒம்பெரு(மை)ம ஒத்தவரி சொல்லலையே! காத்தெல்லாம் மகன்பாட்டு காயிதத்தில் அவன் எழுத்து ஊரெல்லாம் மகன் பேச்சு ஒங்கீர்த்தி எழுதலையே! எழுதவோ படிக்கவோ ஏலாத தாய்பத்தி எழுதிஎன்ன லாபமின்னு எழுதாமாப் போனேனோ? பொன்னையாத் தேவன் பெத்த பொன்னே! குலமகளே! என்னைப் புறந்தள்ள இடுப்புல்வலி பொறுத்தவளே! வைரமுத்து பிறப்பான்னு வயித்தில்நீ சுமந்ததில்ல வயித்தில்நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிருச்சு கண்ணுகாது மூக்கோட கறுப்பா ஒருபிண்டம் இடப்பக்கம் கெடக்கையில என்னென்ன நெனச்சிருப்ப? கத்தி எடுப்பவனோ? களவாணப் பிறந்தவனோ? தரணிஆள வந்திருக்கும் தாசில்தார் இவந்தானோ? இந்த வெவரங்க ஏதொண்ணும் அறியாம நெஞ்சூட்டி வளத்தஒன்ன நெனச்சா அழுகவரும் கதகதன்னு களி(க்) கிண்டி களிக்குள்ள குழிவெட்டி கருப்பட்டி நல்லெண்ண கலந்து தருவாயே தொண்டையில் அதுஎறங்கும் சொகமான எளஞ்சூடு மண்டையில இன்னும் மசமன்னு நிக்கிதம்மா கொத்தமல்லி வறுத்துவச்சுக் குறுமொளகா ரெண்டுவச்சு சீரகமும் சிறுமொளகும் சேத்துவச்சு நீர்தெளிச்சு கும்மி அரச்சு நீ கொழகொழன்னு வழிக்கையிலே அம்மி மணக்கும் அடுத்ததெரு ...