கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
கவியரங்கக் கவிதை தொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை என் முதலாகக் கொண்டதால் என் வாழ்க்கை வணிகத்தில் இழப்பே இல்லை தாள் கண்டால் குனிந்து தலை வணங்கும் பேனா உன் தாள் பணியும் உபதேசம் பெற்ற பின்னர் எழுத்தல்ல இறைவா இவையெல்லாம் என் எழுதுகோல் செய்த ‘சஜ்தாவின்’ சுவடுகள் (சஜ்தா – சிரம் பணிதல்) உன் பெயரில் ஊற்றெடுத்து ஓடுகிறேன் நதியாக கலப்புக்கும் நீயே கடலாகி நில் எண்ணுவது உன்னையே எழுதுவது உன்னையே உண்ணுவது உன்னையே உயிர்ப்பதும் உன்னையே என்னை உன் கையில் எழுதுகோலாய் ஏந்தி நின்னையே நீ எழுதிக்கொள் நாமோ பாவலர் உமரின் பரம்பரையில் வந்தவர்கள் சேகுனாப் புலவரின் செல்லக் குழந்தைகள் பீரப்பாவின் பேரப்பிள்ளைகள் காசிம் புலவரின் கால்வழித் தோன்றல்கள் வண்ணக் களஞ்சிய வாரிசானவர் குலாம் காதிரின் குலக் கொழுந்துகள் செய்குத் தம்பியின் சின்னத் தம்பிகள் ரகுமான் என்றால் இது என்ன ரக மான் என்பார் பொய்மான் பின்னால் போனவன் அல்ல நான் ‘ஈமான்’ பின்னால் ஏகும் ரகுமான் இதுவரை ஒட்டடை அடிக்கக் கோல் ஏந்தினோம் இன்றோ நான் ஓர் ஒட்டடையை புகழக் கோல் ஏந்தினேன் அன்றொரு நாள்...