palamozhi vilakkam

ஆமை புகுந்த வீடும், அமீனா நுழைந்த வீடும் விளங்கவே விளங்காது !
நாம் அறிந்த விளக்கம் :
ஆமை என்ற உயிரினம் வீட்டுக்குள் வந்துவிட்டால் அந்த வீடு அழிவை நோக்கி போகும் அல்லது கெடுதல்கள் நிகழும். அமீனா என்பவர் நீதி மன்றத்தில் பணிபுரியும் சிப்பந்தி (டவாலி என்பார்கள்). நீதிமன்ற அறிக்கைகளை நம்மிடம் சேர்ப்பிப்பவர். வீடு ஏலம், நகை ஏலம் மற்றும் ஏதேனும் வில்லங்க விவரங்களை வீட்டிற்கு, அது தொடர்பான அதிகாரிகளுடன் கொண்டு வந்து அறிவிப்பவர். எனவே அவர் வீட்டுக்கு வந்தால்; ஏதோ கெட்ட செய்திதான் கொண்டு வருவார் என்பது பழமொழியின் விளக்கம்.
விளக்கம் :
இந்த பழமொழியில் ஆமை எனும் சொல் மூன்று விதமான ஆமைகளை உணர்த்துகிறது. கல்லாமை, இயலாமை, முயலாமை. அதாவது கல்வி இல்லாத, சோம்பேறித்தனம் கொண்ட, முயற்சிகளற்ற தன்மைகள் எந்த வீட்டில் உள்ளனவோ அந்த வீடு முன்னேறாது என்பதை இப்பழமொழி அறிவுறுத்துகிறது. அடுத்து இரண்டாம் பாதியாக உள்ள அமீனா புகுந்த வீடு என்பது ஒரு எதுகை மோனைக்காக சேர்க்கப்பட்டது. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
நல்ல மாட்டுக்கு ஒரு சு+டு !
நாம் அறிந்த விளக்கம் :
நல்ல மனிதனாக இருந்தால் ஒரு தடவை சொன்னதுமே புரிஞ்சுகிட்டு நடந்துக்கணும், இந்த அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இதன் உண்மை விளக்கம் இது அல்ல.
விளக்கம் :
இங்கு சு+டு எனும் சொல் சுவடு என வந்திருக்க வேண்டும். சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு ஆகும். அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது. ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.


Comments

Popular posts from this blog

நாலடியார் - 14.கல்வி

கவிஞர் வாலி கவிதைகள்

காலந்தோறும் காதல்- vairamuthu kavithai