கோவில்களில் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்

கோவில்களில் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்

  திருமணம் என்பது இரண்டு நபர்கள் மனமும் ஒன்றாக கலந்து இல்வாழ்க்கையில் ஒன்றிணைந்து சமுதாயத்திற்கும், மக்களுக்கும் எந்தவித தீமையும் செய்யாமல் வாழும் காலம்வரை நன்மைகள் புரிந்து, எந்தவித கெடுதலும் வராமல், வசதி வாய்ப்புடன் வாழ முயற்சிக்கும் ஒருவித சடங்காகத்தான் நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இதெல்லாம் இருக்க கோவில்களில் திருமணம் செய்வதால் ஏற்படும் பலன்களை பற்றி பார்ப்போம்.
🌼 சில ஜாதகர்களுக்கு கோவிலில் திருமணம் செய்து வைத்தால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. பொதுவாகவே வழிபாட்டுத் தலங்களில் வைத்துக் கொள்வது நல்லது.
🌼 வாழ்க்கைத் துணையை ஆலயத்தில் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. அதற்காகத்தான் பண்டைய காலங்களில் கோவில்களை எழுப்பிய மன்னர்கள் பல நு}ற்றுக்கணக்கானோர் அமரும் வகையில் ஆயிரம்கால் மண்டபங்களையும் கட்டி வைத்தனர்.
🌼 மன்னர் காலத்தில் கணவன்-மனைவி பிரிவு என்பது மிகவும் அபு+ர்வமான நிகழ்வாக இருந்தது. தலைமுறைகள் மாற்றத்தினால் பிரிவு அதிகரித்துள்ளது என்று சிலர் கூறினாலும், அந்தக் காலத்தில் இறைவனை சாட்சியாகக் கொண்டு வாழ்க்கைத் துணையை ஏற்றுக் கொண்டவர்கள், பிரிவதற்கு யோசிப்பார்கள். அதற்கு காரணம் இறைவன் மீதுள்ள பக்தி, பயம் ஆகியவை ஆகும்.
🌼 மேலும், வழிபாட்டுத் தலங்களில் எப்போதும் மந்திரங்கள் ஜெபித்தல், ஸ்லோகங்கள் ஓதுதல், இறைவனைப் பற்றிய பாடல்கள், தெய்வீக நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால் எப்போதும் நேர்மறைக் கதிர்கள் அங்கு இருக்கும்.
🌼 எனவே அங்கு மாங்கல்யத்தை அணிந்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும். மேற்கண்ட காரணத்தால்தான் நம் முன்னோர்கள் வசதி இருந்த போதிலும் திருமணத்தை திருக்கோவில்களில் நடத்தினர். திருமணம் கோவிலில் நடந்தால் உங்களுடைய திருமண வாழ்க்கையும் சந்தோஷமாக அமையும்!!...

Comments

Popular posts from this blog

நாலடியார் - 14.கல்வி

கவிஞர் வாலி கவிதைகள்

காலந்தோறும் காதல்- vairamuthu kavithai