பழமொழி விளக்கம்
அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்!
விளக்கம் :
விளக்கம் :
சில குழந்தைகள் பிறக்கும்போதே நோய்களின் அறிகுறியுடன்
பிறக்கின்றன. உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் பகுதிகள் நீல நிறமாக இருப்பின்
குழந்தை செவ்வாப்பு என்னும் நோயால் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள்
கருதுகின்றனர். இதற்குரிய மருந்தாகக் கழுதைப் பால் புகட்டப்படுகிறது
என்பதனை இப்பழமொழி குறிக்கிறது.
ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ! விளக்கம் :
ஆவாரைப் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய
வைத்து, இடித்து வைத்துக் கொண்டு தேநீர், காப்பித்தூள் இவைகளுக்குப் பதிலாக
உபயோகித்து வர உடல் வறட்சி, நீரிழிவு நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக்
குணமாக்குவதால், ஆவாரைப் பூவின் மகத்துவத்தைக் குறிக்க வந்ததே இந்த
பழமொழியாகும்.
Comments
Post a Comment