பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சி

பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சி 
பியாஜே என்ற அறிவியல் மேதை தன் வாழ்நாள் முழுவதும் குழந்தைகளின் வளர்ச்சியைப் புரிந்து கொள்வதில் செலவிட்டார். அவருடைய கண்டுபிடிப்புகள் சுவையானது. குழந்தைகள் பிறப்பிலிருந்து எவ்வாறு அறிதல் திறன் வளர்ச்சி அடைகிறது என்பதை நான்கு படிநிலைகளாகப் பகுத்துள்ளார். முதல் நிலை - தொட்டு உணரும் பருவம் பிறப்பிலிருந்து - 18 மாதம் வரை இரண்டாம் நிலை - மனச் செயல்பாடுகளுக்கு முந்தைய நிலை - 18 மாதம் முதல் 7 வயது வரை மூன்றாம் நிலை - புலன்களை உணர்வதை வைத்து சிந்தித்துச் செயல்படும் மனச் செயல்பாட்டு நிலை - 7 முதல் 12 வயது வரை நான்காம் நிலை - முறையாகச் சிந்தித்து எண்ணங்களின் அடிப்படையில் செயல்படும் மனநிலை - 12 வயதிற்கு மேல்
மனச்செயல்பாட்டு நிலை தொகு
இப்பருவத்தில் உள்ள குழந்தைகள் பொருள்களின் தொடர்புகளை அறிந்து அவற்றின் அமைப்புகளை யோசித்துத் தங்கள் மனத்திலேயே பொருள்களின் நிலைகளை மாற்றி வைத்துப் பார்க்கத் தொடங்குகிறார்கள். சந்தேகங்கள் ஏற்படும்போது பொருள்களை அல்லது அவற்றின் அமைப்புகளை மாற்றி வைத்துக் கண்கூடாகப் பார்த்துச் சந்தேகங்களைப் போக்கிக் கொள்கின்றனர். பொருள்களின் மாறாத் தன்மையைப் புரிந்து கொள்கின்றனர். 6 + 3 = 9 என்றால் 3 + 6 = 9 ஆகத்தான் இருக்க வேண்டும் என்று கற்கத் தொடங்ககிறார்கள். இப்பருவத்தினர் தாமும் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் விளக்க முற்படுகின்றனர். நேரடிக் கற்பித்தல், முறைப்படுத்தப்படாத அனுபவங்கள், மற்றும் முதிர்ச்சியின் காரணமாகத் தங்களடைய கருத்துக்களில் மாற்றங்களைக் கொண்டுவர முயல்கின்றனர். கற்பிக்கப்படும் கருத்துக்களில் உள்ள உண்மைகளைப் புரிந்து கொள்ள அதற்கான காரணகாரியங்களை ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்குகின்றனர்.
பியாஜேயின் கருத்துக்களை அறிதல் திறன் வளர்ச்சியில் பயன்படுத்துதல் தொகு
1. மூன்று முதல் ஏழு வயது வரையுள்ள குழந்தைகள் புலனியக்கத்திறன், மொழித்திறன் பெற்றவர்களாக உள்ளனர். இவர்களுக்கு ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், கணிமண்ணால் பொம்மைகள் செய்தல் போன்ற கைவேலைகள், நடனம், நாடகம், இசைப்பயிற்சி, பேச்சு போன்ற செயல்களில் பயிற்சியளிக்க வேண்டும். பொருட்களின் தன்மை, வகைப்படுத்துதல், வரிசைப்படுத்துதல், காலம், இடைவெளி, தொலைவு, எண்கள், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணிதச் செயல்கள் முதலியனவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சிகள் பலஅ ளிக்க வேண்டும். எட்டு முதல் பன்னிரெண்டு வயது வரையுள்ள குழந்தைகளுக்கத் தத்துவ ரீதியாகப் புரிந்து கொள்ள முடியாத கருத்துக்களை அவர்களுடைய இளமனதில் திணிப்பதைத் தவிர்க்க வேண்டும். 2. கற்றல் -கற்பித்தல் உபகரணங்களும், கருவிகளும் குழந்தைகளின் அறிவுத்திறன் வளர்ச்சிக்கேற்ப அறிந்து வழங்கப்பட வேண்டும். புதிய கருத்துக்களை அறிமுகப்படுத்தும் போது குழந்தைகளின் ஆர்வத்தைத் துhண்டும் வகையில் கற்பிக்கும் பாடங்களும் கருவிகளும் தெரிவு செய்தல் வேண்டும். அப்போது தான் கற்பிக்கப்படும் கருத்துக்கள் மனதில் உறுதிபடும் செய்திகளை நேரடியாக வாய்மொழி வழியாக மட்டும் கூறாமல் செயல்வழிக் கற்பிப்பத நன்மை பயக்கும். மனரீதியான மாற்றங்களையும் ஏற்படுத்தும். 3. புதிய கருத்துக்களை அறிமுகப்படுத்தும்போது பழைய அனுபவங்களுடன் ஒப்பிட்டுக் கூறி அவை இரண்டுக்குமுள்ள தொடர்பினை எடுத்துக்காட்டி குழந்தைகளக்குப் புரிய வைக்க வேண்டும்

Comments

Popular posts from this blog

இணையத்தின் விளைவுகள்

கவிஞர் வாலி கவிதைகள்

நாலடியார் - 14.கல்வி