மகத்துவமும், மருத்துவமும் நிறைந்த வாழைப்பழம்

மகத்துவமும், மருத்துவமும் நிறைந்த வாழைப்பழம்!
வாழைப்பழம் :
வாழைப்பழம், நம் உடலில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. விஞ்ஞானிகளும், சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர் தரமான உணவு, வாழைப்பழம் தான் என்கிறார்கள். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் 'சி" பல் ஈறுகளையும், எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது.
நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும், சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சமநிலையில் இருக்கும். உடலில் பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட முடியும்.
வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல, பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. பச்சை வாழை அல்சர், இரத்த சோகை, காசநோய், மலச்சிக்கல், மூலநோய் குறைபாடு மற்றும் வயிற்றுப்போக்கு நோயை குணப்படுத்தும். இது அதிக அளவில் சக்தியைத் தருவதால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.

Comments

Popular posts from this blog

இணையத்தின் விளைவுகள்

கவிஞர் வாலி கவிதைகள்

நாலடியார் - 14.கல்வி