திருமால்
திருமால்
இந்துக்கடவுள்
திருமால் என்பவர் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளாக அறியப்பெறுகிறார். இவர் விஷ்ணு, கேசவன், பெருமாள், வாசுதேவன் என்றும் அறியப்பெறுகிறார். தமிழர்களின் முல்லைநிலத் தெய்வமாக வணங்கப்பட்ட மாயோன் தெய்வமாக திருமால் அறியப்பெறுகிறார். சங்ககாலத் தமிழ்ப்பாடல்களில் மாயோன் வழிபாடு பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. மால், மாலன், மாலவன், பெருமால் என்றும் அறியப்பெறுகிறார். சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் என்ற பஞ்சாயுதங்களை கொண்டவராகவும், பாற்கடலில் திருமகளுடன் ஆதிசேசனின் படுக்கையில் படுத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.[1] இவருடைய வாகனமாக கருடனும், அருவ வடிவமாகக் சாளக்கிராமம் கருதப்படுகிறது.

திருமால்-நான்கு கரங்களுடன்
அதிபதி காத்தல்
தேவநாகரி विष्णु
சமசுகிருதம் viṣṇu
வகை மும்மூர்த்திகள்
இடம் வைகுந்தம்
ஆயுதம் சங்கு, சக்கரம், வில் மற்றும் கதாயுதம்
துணை இலக்குமி

பூதேவி மற்றும் ஸ்ரீதேவியுடன், நாபிக் கமலத்தில் பிரம்மனுடன் கூடிய மகாவிஷ்ணுவின் பஞ்சலோக சிலை

தியான நிலையில் நான்கு கைகளுடன் கூடிய விஷ்ணுவின் சிற்பம், அரசு அருங்காட்சியகம், மதுரா
இந்துக்கோவில்களில் சயனக் கோலத்தில் மூலவராக இருக்கும் ஒரே இறைவன் இவரே. திருவரங்கம் போன்ற வைணவத்தலங்களில் இந்த கோலமுள்ளது. நின்ற கோலத்தில் திருப்பதி போன்ற தலங்களில் அருளுகிறார். மும்மூர்த்திகள் வழிபாட்டில் இவர் காக்கும் தொழில் செய்யும் கடவுள். மற்றவர்களான பிரம்மா படைக்கும் தொழில் செய்பவர்.[2] சிவபெருமான் அழித்தல் தொழில் செய்பவர். பிரம்மன் இவருடைய தொப்புள்கொடியிலிருந்து தோன்றியவராகப் புராணங்கள் கூறுகின்றன. அறம் குறித்த சிந்தனைகளும் அதைத்தொடர்ந்த செயல்களும் குறையும்பொழுது தசாவதாரம் முதலிய எண்ணற்ற அவதாரங்களை எடுத்து அதை சரிசெய்கிறார். இவருடைய ராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும் பரவலாக வணங்கப்படுகின்றது.

இராமாயணம், மகாபாரதம், பாரத வெண்பா, அரங்கநாதர் பாரதம் போன்ற பல வைணவநூல்கள் திருமாலுடைய புகழை கூறுகின்றன.
இதிகாசமான மகாபாரதம் இவருடைய கிருஷ்ண அவதாரத்தினையும், இராமாயணம் இராம அவதாரத்தினையும் மையப்படுத்தி எழுதப்பெற்றுள்ளது. பன்னிரு ஆழ்வார்களின் பாடல்களடங்கிய நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூல் திராவிட வேதம் என்று அழைக்கப்படுகிறது.பாகவத புராணம், ஸ்ரீமத் பாகவதம், அரி வம்சம், விஷ்ணு புராணம், மச்சபுராணம், வாமன புராணம் என பன்னிரு புராண நூல்களில் திருமாலின் பெருமை விவரிக்கப்பட்டுள்ளதுடன், புத்தரும் சமணரும் இவருடைய அவதாரங்கள் என்கின்றன.[3]
குணநலன்கள் தொகு
திருமாலின் குணங்களாக நான்கு குணங்கள் கூறப்பெறுகின்றன. அவையாவன,..
வாத்சல்யம் - தாய்ப்பசுவின் கன்று கொள்கின்ற அன்பு.
சுவாமித்துவம் - கடவுள்களுக்கெல்லாம் தலைமையேற்கும் சிறப்பு.
சௌசீல்யம் - ஏற்றத்தாழ்வின்றி நட்பு பாராட்டுவது.
சௌலப்யம் - கடவுளின் எளிமையை குறிப்பது.
இந்த நான்கு குணங்களும் திருமாலுடைய கிருஷ்ண அவதாரத்தில் வெளிப்பட்டதாகவும் கருதப்பெறுகிறது. அர்ஜூனனின் தவறை நோக்காது, பாரத போரினை நிகழ்த்தியமை வாத்சல்யமாகவும், அர்ஜூனனுக்கு தன்னுடைய பரத்துவத்தை விளக்கியமை சுவாமித்தரமாகவும், குசேலனிடம் நட்பு பாராட்டியமை சௌசீல்யமாகவும், இறைவனாகிய திருமாலே மனித உருவெடுத்து அவதரித்தமை சௌலப்யமாகவும் சொல்லப்பெறுகிறது.[4]

திருமாலின் அவமச்ச அவதாரம்
கூர்ம அவதாரம்வராக அவதாரம்
நரசிம்ம அவதாரம்
வாமண அவதாரம்
பரசுராம அவதாரம்
இராம அவதாரம்
கிருஷ்ண அவதாரம்
கௌதம புத்தர்
கல்கி அவதாரம்.
Comments
Post a Comment