சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு

சபரிமலை ஐயப்பன் கோவில்!
ஐயப்பன், சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வருபவன். ஐயப்பன் வழிபாடு கேரளா, தமிழ்நாடு, இலங்கை ஆகிய இடங்களில் முதன்மை பெறுகிறது.
சபரிமலை, கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மகிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என கூறப்படுகிறது.
அமைவிடம் :
பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பனின் கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும்.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் தை மாதம் முதல் நாள் வரை, ஏறத்தாழ இலட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
வரலாறு :
கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார். அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர் தான் ஐயப்பன். குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர். வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் மரத்தடியில் தேஜசுடன் குழந்தை ஐயப்பனை கண்டான். அந்த குழந்தையை அரண்மனை கொண்டு சென்றான். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகன் அல்ல. உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர், சிலர். தீயபோதனைகளால் அரசியும் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை, புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள். ஐயப்பன் தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனை தடுத்தாள். வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. ஐயப்பனின் அவதார மகிமை பு+ர்த்தி பெற்றது.
இந்திரனே புலியாக மாற புலிமேல் ஏறி நாடு சென்றான், ஐயப்பன். புலிமேல் வந்த மணிகண்டனை கண்டு அரசி, தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டாள். ஐயப்பனும் மன்னித்து அருளினார். தன் அவதார காரணம் பு+ர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரிமலையில் 18 படிகளுக்கு மேல் தவக்கோலத்தில் அமர்ந்தார், ஐயப்பன்

Comments

Popular posts from this blog

இணையத்தின் விளைவுகள்

கவிஞர் வாலி கவிதைகள்

நாலடியார் - 14.கல்வி