திருச்செந்தூர் முருகன் கோவில் பற்றி யாருக்கும் தெரியாத ஓர் ரகசியம்!!

திருச்செந்தூர் முருகன் கோவில் பற்றி யாருக்கும் தெரியாத ஓர் ரகசியம்!!
கடல் நீரை இனிப்பாக மாற்றும் அதிசய கோவில் கிணறு!! 
  அறுபடை வீடுகள் எனப்படும் முருகப்பெருமானின் சிறப்புக்குரிய கோவில்கள் தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை என ஆறு ஊர்களில் அமைந்திருக்கின்றன.
இவ்வாறு கோவில்களில் ஐந்து கோவில்கள் மலை மீது அமைந்திருக்க திருச்செந்தூர் மட்டும் கடற்கரையை ஒட்டி அமைந்து சிறப்பை பெற்றுள்ளது.

🌊 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சென்னையில் இருந்து 600கி.மீ தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவை ஒட்டியா கடற்கரையில் அமைந்துள்ளது.
🌊 இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது. இவ்விடம் முன்னர் திருச்சீரலைவாய் என்றழைக்கப்பட்டது.
🌊 இது போன்ற பல சிறப்புகளை பெற்ற இந்த கோவிலில் பலரையும் அதிசயத்தில் ஆழ்த்தும் ஒரு கிணறு உள்ளது. அது தான் நாழிக்கிணறு.

என்ன சிறப்பு?
🌊 கடற்கரைக்கு மிக அருகாமையில் இந்த கிணறு இருந்தாலும், இதில் உள்ள நீரில் உப்பு கரிப்பதில்லை. அதற்கு மாறாக இந்த நீர் இனிக்கிறது.
அறிவியல் காரணமா?
🌊 இதன் பின்பு அறிவியல் உண்டு என்று பலரும் பலவிதமான காரணங்களை கூறுகின்றனர். இதில் பெரும்பாலானோர் கூறும் காரணம் என்னவென்றால், கடல் மண்ணினால் நீர் வடிகட்டப்பட்டு உப்பு தன்மை நீக்கப்பட்டு இந்த நீர் கிணற்றை அடைகிறது என்கின்றனர். ஒரு வேலை அது தான் காரணம் என்றால்.., அந்த பகுதியில் உள்ள அனைத்து கிணறுகளில் உள்ள நீரும் இனிக்கவேண்டும் அல்லவா..?
உண்மை என்ன?
🌊 ஆனால்.., உண்மை என்னவென்றால் நாழிக்கிணறு தவிர மற்ற கிணறுகளில் உள்ள நீரில் உப்பு தன்மை மிகவும் கடுமையாக உள்ளது.
🌊 அதனோடு, அந்த கடற்பகுதியின் சுற்று வட்டாரத்தில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள அனைத்து கிணறுகளிலும் உப்பு தண்ணீரே கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால், கடலில் இருந்து வெறும் 100 முதல் 200 அடி தொலைவில் அமைந்துள்ள இந்த கிணறில் மட்டும் எப்படி சுவை மிக்க நீர் கிடைக்கிறது..?
புராணங்கள் என்ன சொல்கின்றன?
🌊 முருகப்பெருமான் சு+ரபத்மனை வதம் செய்தது திருச்செந்தூர் என்பது நாம் அறிந்ததே. அந்த போரின்போது, முருகப்பெருமான் தன் படையில் உள்ள வீரர்களின் தாகத்தை தீர்ப்பதற்காக தன் வேலின் மூலம் உருவாக்கிய கிணறே நாழிக்கிணறு என்கிறது புராணங்கள். அப்படி பார்த்தால், கடவுள் உருவாக்கிய கிணறில் சுவையான நீர் வராமல் இருந்தால்தான் அதிசயம்.

Comments

Popular posts from this blog

இணையத்தின் விளைவுகள்

கவிஞர் வாலி கவிதைகள்

நாலடியார் - 14.கல்வி