திரிகடுகம்

இருளுலகம் சேராத ஆறு மூன்று – திரிகடுகம் 90

’ர்’ ஆசிடையிட்ட எதுகையமைந்த நேரிசை வெண்பா 

ஈதற்குச் செய்க பொருளை அறநெறி 
சே’ர்’தற்குச் செய்க பெருநூலை - யாதும் 
அருள்புரிந்து சொல்லுக சொல்லைஇம் மூன்றும் 
இருளுலகம் சேராத ஆறு. 90 திரிகடுகம் 

பொருளுரை: 

செல்வத்தை பிறருக்குக் கொடுக்கும் பொருட்டுத் தேடக்கடவன்; அறத்தின் வழியில் சேரும் பொருட்டு பெருமையாகிய நூற்பொருளைக் கற்கக் கடவன்; எத்தன்மைத்தாகிய சொல்லையும் அருளை விரும்பிச் சொல்லக் கடவன் ஆகிய இம் மூன்றும் நகர உலகைச் சேராமைக்குக் காரணமாகிய வழிகளாம். 

கருத்துரை: 

அறஞ் செயற்காகப் பொருளையும், அறநெறியில் ஒழுகுவதற்காகப் படிப்பையும், அருள் விளங்கும்படி பேச்சையும் ஒருவர் கொள்ளவேண்டுமென்பது. 

நூலைச் செயல் என்பது இங்குத் தகுதியால் கற்பதன்மேற் கூறப்பட்டது.

Comments

Popular posts from this blog

இணையத்தின் விளைவுகள்

கவிஞர் வாலி கவிதைகள்

நாலடியார் - 14.கல்வி