Posts

Showing posts from March, 2018

யோகா

யோக வழியில் வாழ்க்கை! யுஜ் என்னும் சமஸ்கிருத சொல்லில் இருந்த வந்த யோகா என்னும் சொல்லுக்கு, தனிப்பட்டவரின் நனவுநிலை அல்லது ஆன்மா, பிரபஞ்ச சக்தியுடன் இணைதல் என்று அர்த்தம். யோகா என்பது இந்தியாவின் 5000 ஆண்டு பழைமை வாய்ந்த உடல் சார்ந்த அறிவு. யோகா என்பதைப் பலர், உடல் வளைதல், திரும்புதல், நீட்டுதல், மூச்சினை எடுத்து விடுதல் என சிக்கலான உடற்பயிற்சி என்று நினைக்கக்கூடும், இவையனைத்தும், உள்ளிருக்கும் மனித மனதின் ஆன்மாவின் எல்லையற்ற சக்தியைத் திறந்து திறனை அதிகரிக்கும் ஆழமான அறிவியலைப் பற்றிய மேலோட்டமான கருத்துகள். யோகா என்பதே, தன்னுள் எப்படி வாழ வேண்டுமெனும் வாழ்க்கையின் சாரத்தைப் பொதிந்து வைத்திருக்கும் அறிவியல் ஆகும் – ஞான யோகம் – ஞான தத்துவ மார்க்கம், பக்தி யோகம் – பக்தி வழியில் பேரின்பம், கர்ம யோகம் – செயல்களின் பாதை, ராஜ யோகம் – மனதைக் கட்டுக்குள் வைக்கும் மார்க்கம். ராஜ யோகம், எட்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ராஜ யோக அமைப்பின் மையப்பகுதி என்பது, இவை அனைத்தையும் பல வழிகளில் சமன் செய்து இணைக்கும் யோக ஆசனப் பயிற்சியாகும். ஸ்ரீ ஸ்ரீ யோகா மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள்,...

கோவிலில் மணி அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம்...!!

Image
         கோவிலுக்குள் மணி அடித்துவிட்டு வணங்குவது ஏன் தெரியுமா?               கோவிலில் மணி அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம்...!!   கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது. கோவிலில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது கொடுத்து கேட்பார் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளது என சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். கோவிலுக்கு செல்லும் அனைவரும் மணி அடிப்பது ஏன்?  பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உள்ள மணி ஓசையின் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது. கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்பார் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் அது உண்மை அல்ல.  ஆகம சாஸ்திரங்களின் படி, கோவில் மணியில் இருந்து வெளிப்படும் ஓசை எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது. ...

காலந்தோறும் காதல்- vairamuthu kavithai

காலந்தோறும் காதல் 1. சங்க காலம் ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு குருகு பறக்கும் தீம்புனல் நாடன் கற்றை நிலவு காயும் காட்டிடை என்கை பற்றி இலங்குவளை ஞெகிழ்த்து மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து வாட்கண் மயங்க உண்டதை மீண்டும் பசலை உண்ணும் பாராய் தோழி * * * * * 2 காவிய காலம் பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார் மின்னல் மிடைந்த இடையென்பார் - இன்னும் கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில் கரும்பிருக்கும் என்பார் கவி. * * * * * 3 சமய காலம் வெண்ணிலவால் பொங்குதியோ விரக்தியால் பொங்குதியோ பெண்ணொருத்தி நான்விடுக்கும் பெருமூச்சாற் பொங்குதியோ பண்ணளந்த மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால் விண்ணளந்து பொங்குதியோ விளம்பாய் பாற்கடலே! * * * * * 4 சிற்றிலக்கியக் காலம் தூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள் - மனம் துள்ளி ஓடும்விழிக் கெண்டையாள் - நெஞ்சைத் தாக்கி மறுநொடியில் தவிடுபொடியாக்கும் சண்டையாள் - வெள்ளித் தண்டையாள் முலை அதிரும்படி மணி உதிரும்படி மனம் பதறும்படிஆடும் பாவையாள் - வில் மாரன் பகைமுடிக்கத் தேவையாள் * * * * * 5 தேசிய காலம் சின்னஞ் சிறுகமலப் பூவினாள் - என் சித்தத்திலே வந்து மேவினாள் கண்ணில் ஜோதி...

முதன் முதலாய் அம்மாவுக்கு- vairamuthu kavithai

முதன் முதலாய் அம்மாவுக்கு ஆயிரந்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய் சொன்னேன் பெத்தவளே ஒம்பெரு(மை)ம ஒத்தவரி சொல்லலையே! காத்தெல்லாம் மகன்பாட்டு காயிதத்தில் அவன் எழுத்து ஊரெல்லாம் மகன் பேச்சு ஒங்கீர்த்தி எழுதலையே! எழுதவோ படிக்கவோ ஏலாத தாய்பத்தி எழுதிஎன்ன லாபமின்னு எழுதாமாப் போனேனோ? பொன்னையாத் தேவன் பெத்த பொன்னே! குலமகளே! என்னைப் புறந்தள்ள இடுப்புல்வலி பொறுத்தவளே! வைரமுத்து பிறப்பான்னு வயித்தில்நீ சுமந்ததில்ல வயித்தில்நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிருச்சு கண்ணுகாது மூக்கோட கறுப்பா ஒருபிண்டம் இடப்பக்கம் கெடக்கையில என்னென்ன நெனச்சிருப்ப? கத்தி எடுப்பவனோ? களவாணப் பிறந்தவனோ? தரணிஆள வந்திருக்கும் தாசில்தார் இவந்தானோ? இந்த வெவரங்க ஏதொண்ணும் அறியாம நெஞ்சூட்டி வளத்தஒன்ன நெனச்சா அழுகவரும் கதகதன்னு களி(க்) கிண்டி களிக்குள்ள குழிவெட்டி கருப்பட்டி நல்லெண்ண கலந்து தருவாயே தொண்டையில் அதுஎறங்கும் சொகமான எளஞ்சூடு மண்டையில இன்னும் மசமன்னு நிக்கிதம்மா கொத்தமல்லி வறுத்துவச்சுக் குறுமொளகா ரெண்டுவச்சு சீரகமும் சிறுமொளகும் சேத்துவச்சு நீர்தெளிச்சு கும்மி அரச்சு நீ கொழகொழன்னு வழிக்கையிலே அம்மி மணக்கும் அடுத்ததெரு ...

பெரியார்

            பெரியார்   என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை இங்கு விரிவாக காண்போம். பிறப்பு:  செப்டம்பர்  17, 1879 இடம்:  ஈரோடு, தமிழ்நாடு(இந்தியா) இறப்பு:  டிசம்பர்  24, 1973 பணி:  அரசியல்வாதி, சமூக சேவகர். நாட்டுரிமை:  இந்தியா பிறப்பு: ஈ.வெ. ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ...

தஞ்சை பெரிய கோயில்

Image
தஞ்சை பெரிய கோயிலுக்கும் தலையாட்டி பொம்மைக்கும் என்ன தொடர்பு? 1 ,000 ஆண்டுகளைக் கடந்து தமிழினத்தின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். எத்தனையோ இயற்கைச் சீற்றங்கள், அந்நியர்களின் படையெடுப்புகள்... அனைத்தையும் தாங்கி, காலத்தின் சாட்சியாக கம்பீரம் குலையாமல் நிற்கும்  தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜனின் 1032-ம் ஆண்டு சதயவிழா இன்று (29.10.2017) தொடங்கி நாளை வரை நடக்கிறது. தஞ்சைப் பெரிய கோயில், ஏராளமான அற்புதங்களைத் தன்னுள்ளே பொதிந்துவைத்திருக்கிறது. புவி அச்சின் சாய்வுகளைக் கணித்து, மிக நுட்பமாக அடித்தளத்தை அமைத்து, இருகாற்படை நுட்பத்தில் தொடங்கி, கனமில்லாத ஒற்றைக்கல்லால் கோபுரத்தை வடிவமைத்து நிறுத்தியிருக்கிறார்கள் சோழச் சிற்பிகள். புவியின் சுழற்சிக்கேற்ப தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இக்கோயிலின் கட்டுமான நுட்பம் உலக வல்லுநர்களை எல்லாம் விழியுயர்த்தி வியக்கவைக்கிறது. ஒவ்வொரு கல்லிலும் கலைநயம். ஒவ்வொரு சிற்பத்திலும் ஓராயிரம் கதைகள். வழிபாட்டுக்குரிய ஆலயமாக மட்டும் அல்லாமல், வங்கியாக, கலைக்கூடமாக, சமூக நிர்வாகத்துக்கான...

பதினெட்டு சித்தர்கள் கோவில்

       பதினெட்டு சித்தர்கள் கோவில்  சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்றும், சிந்தை உடையவர் என்றும் பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும். இச் செயலை சித்து விளையாட்டு என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர். இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்க காணலாம். சித்தர்கள் யோக சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன. அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் என்பது ஆன்மீகவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. இன்று பழனிமலையின் பிரபலமும், சக்தியும் உலகம் அறிந்த ஒன்றாகும். அந்த ஸ்தலத்தில் நவபாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் யோக சமாதியை விரும்பிய போகர் என்ற சித்தரே. அதே போன்று இன்று உலக மக்கள் திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கும் அந்த ஸ்தலம் உலக பிரசித்தி பெற்றதற்கும் காரணம் அங்குள்ள கொங்கணவர் என்ற சித்தரே. அப்படிப்பட்ட சித...

புறநானூறு