பதினெட்டு சித்தர்கள் கோவில்
பதினெட்டு சித்தர்கள் கோவில்
சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்றும், சிந்தை உடையவர் என்றும் பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும். இச் செயலை சித்து விளையாட்டு என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர். இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்க காணலாம். சித்தர்கள் யோக சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன. அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் என்பது ஆன்மீகவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. இன்று பழனிமலையின் பிரபலமும், சக்தியும் உலகம் அறிந்த ஒன்றாகும். அந்த ஸ்தலத்தில் நவபாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் யோக சமாதியை விரும்பிய போகர் என்ற சித்தரே. அதே போன்று இன்று உலக மக்கள் திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கும் அந்த ஸ்தலம் உலக பிரசித்தி பெற்றதற்கும் காரணம் அங்குள்ள கொங்கணவர் என்ற சித்தரே. அப்படிப்பட்ட சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோ திருமூலர் - சிதம்பரம் இராமதேவர் - அழகர்மலை அகஸ்தியர் - திருவனந்தபுரம் கொங்கணர் - திருப்பதி கமலமுனி - திருவாரூர் சட்டமுனி - திருவரங்கம் கரூவூரார் - கரூர் சுந்தரனார் - மதுரை வான்மீகர் - எட்டிக்குடி நந்திதேவர் - காசி பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில் போகர் - பழனி மச்சமுனி - திருப்பரங்குன்றம் பதஞ்சலி - இராமேஸ்வரம் தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில் கோரக்கர் - பொய்யூர் குதம்பை சித்தர் - மாயவரம் இடைக்காடர் - திருவண்ணாமலை
Read more at: https://tamil.oneindia.com/religion/hindu/20080827-18-siddhar-temples.html

Comments
Post a Comment