Posts

Showing posts from February, 2018

சங்கத்தமிழ் புலவர்கள்

சங்கத்தமிழ் புலவர்கள் Sangam Poets and Poems      அகம்பன் மாலாதனார் – Akampam Malāthanār – நற்றிணை 81 – ஒரே பாடல் அஞ்சியத்தை மகள் நாகையார் – Anjitathai Makal Nākaiyār – அகநானூறு 352 – ஒரே பாடல் அஞ்சில் அஞ்சியார் – Anjil Anjiyār – நற்றிணை 90 – ஒரே பாடல் அஞ்சில் ஆந்தையார் – Anjil Ānthaiyār –  குறுந்தொகை  294, நற்றிணை 233 அணிலாடு முன்றிலார்  – Anilādu Mundriyār – குறுந்தொகை 41 – ஒரே பாடல் அண்டர் நடும் கல்லினார் – Andar Nadum Kallinār – புறநானூறு 283, 344, 345 அண்டர் மகன் குறுவழுதியார் – Andar Makan Kuruvaluthiyār – அகநானூறு 228,  குறுந்தொகை  345, புறநானூறு 346 அதியன் விண்ணத்தனார் – Athiyan Vinnathanār – அகநானூறு 301 – ஒரே பாடல் அந்தி இளங்கீரனார் – Anthil Ilankeeranār – அகநானூறு 71 – ஒரே பாடல் அம்மள்ளனார் – Ammallanār – நற்றிணை 82 – ஒரே பாடல் அம்மூவனார்  – Ammoovanār – ஐங்குறுநூறு 101-200, அகநானூறு 10, 140, 280, 370, 390, குறுந்தொகை  49, 125, 163, 303, 306, 318, 327, 340, 351, 397, 401, நற்றிணை 4, 35, 76, 138, 275, 307,...

கிரந்த எழுத்துக்கள்

கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். 'ஜ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ' போன்ற கிரந்த எழுத்துக்கள் ஆங்கில மற்றும் அறிவியல் சொற்களையும், வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள ஶ் ஶ ஶா ஶி ஶீ ஶு ஶூ ஶெ ஶே ஶை ஶொ ஶோ ஶௌ ஜ் ஜ ஜா ஜி ஜீ ஜு ஜூ ஜெ ஜே ஜை ஜொ ஜோ ஜௌ ஷ் ஷ ஷா ஷி ஷீ ஷு ஷூ ஷெ ஷே ஷை ஷொ ஷோ ஷௌ ஸ் ஸ ஸா ஸி ஸீ ஸு ஸூ ஸெ ஸே ஸை ஸொ ஸோ ஸௌ ஹ் ஹ ஹா ஹி ஹீ ஹு ஹூ ஹெ ஹே ஹை ஹொ ஹோ ஹௌ க்ஷ் க்ஷ க்ஷா க்ஷி க்ஷீ க்ஷு க்ஷூ க்ஷெ க்ஷே க்ஷை க்ஷொ க்ஷோ க்ஷௌ ஸ்ரீ

தமிழ் எண்கள்

தமிழ் எண்களின் பட்டியல். தமிழ் எண்கள் மற்றும் அதன் பெயர்களை படித்து தெரிந்துகொள்ளுங்கள். ஒன்று ௧   - 1 இரண்டு ௨   - 2 மூன்று ௩   - 3 நான்கு ௪   - 4 ஐந்து ௫   - 5 ஆறு ௬   - 6 ஏழு ௭   - 7 எட்டு ௮   - 8 ஒன்பது ௯   - 9 பத்து ௰   - 10

முயற்சி

Image

திரிகடுகம்

இருளுலகம் சேராத ஆறு மூன்று – திரிகடுகம் 90 ’ர்’ ஆசிடையிட்ட எதுகையமைந்த நேரிசை வெண்பா  ஈதற்குச் செய்க பொருளை அறநெறி  சே’ர்’தற்குச் செய்க பெருநூலை - யாதும்  அருள்புரிந்து சொல்லுக சொல்லைஇம் மூன்றும்  இருளுலகம் சேராத ஆறு. 90 திரிகடுகம்  பொருளுரை:  செல்வத்தை பிறருக்குக் கொடுக்கும் பொருட்டுத் தேடக்கடவன்; அறத்தின் வழியில் சேரும் பொருட்டு பெருமையாகிய நூற்பொருளைக் கற்கக் கடவன்; எத்தன்மைத்தாகிய சொல்லையும் அருளை விரும்பிச் சொல்லக் கடவன் ஆகிய இம் மூன்றும் நகர உலகைச் சேராமைக்குக் காரணமாகிய வழிகளாம்.  கருத்துரை:  அறஞ் செயற்காகப் பொருளையும், அறநெறியில் ஒழுகுவதற்காகப் படிப்பையும், அருள் விளங்கும்படி பேச்சையும் ஒருவர் கொள்ளவேண்டுமென்பது.  நூலைச் செயல் என்பது இங்குத் தகுதியால் கற்பதன்மேற் கூறப்பட்டது.