இணையத்தின் விளைவுகள் இணையம் என்பது உலக அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பைக் குறிப்பதாகும். இந்த இணையம் மனிதர்களின் உற்றத் தோழனாக மாறிவிட்டதை யாராலும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. இந்நவீன உலகில் பாலமாய் இருப்பது இணையமே ஆகும் என்றால் மிகையாகாது. அந்த இணையத்தின் ஆணிவேராக இயங்கும் பெரும்பாலான அடிப்படைத் தொழில்நுட்பங்களைப் புழங்குவது பற்றி இங்கு குறிப்பிட வேண்டும். மின்னஞ்சல் (email), வலைத்தளங்கள் (web pages), வலைப்பூக்கள் (blogs), தேடுபொறிகள் (search engines), வலைக்கூடங்கள் அல்லது சமூக வலைத்தளங்கள் (socical network such as Twitter, Facebook, LinkedIn), வலைத்திரைகள் (video sharing services such as You-Tube), மின்னாட்சி (e-governance), மின்வணிகம் (e-Commerce), வலையூடகங்கள் ( web versions of electronic media), மின் தரவுத்தளங்கள் (online encycopedia such as wikipedia), மின்கலைக்கூடங்கள் (electronic art galleries), இணையக் கல்விக்கூடங்கள் (web based learning, e-learning) என்பவை இவற்றில் அடங்கும். ஆக கல்வி, தொழிற்துறை, விளையாட்டு, மருத்துவம், அறி...