Posts

Showing posts from November, 2017

vairamuthu kavithai

Image

மணிமேகலை

மணிமேகலை  ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று.  மணிமேகலை யின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால்  மணிமேகலை யும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்காப்பியத்தின் நாயகி  மணிமேகலை , சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி  மணிமேகலை யை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள். அவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன்  மணிமேகலை யின் மேல் காதல் கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்த சமயத் துறவியானாள். அங்கு அவளுக்கு பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த  மணிமேகலை , அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள். A ...

திருமால்

திருமால் இந்துக்கடவுள் திருமால் என்பவர் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளாக அறியப்பெறுகிறார். இவர் விஷ்ணு, கேசவன், பெருமாள், வாசுதேவன் என்றும் அறியப்பெறுகிறார். தமிழர்களின் முல்லைநிலத் தெய்வமாக வணங்கப்பட்ட மாயோன் தெய்வமாக திருமால் அறியப்பெறுகிறார். சங்ககாலத் தமிழ்ப்பாடல்களில் மாயோன் வழிபாடு பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. மால், மாலன், மாலவன், பெருமால் என்றும் அறியப்பெறுகிறார். சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் என்ற பஞ்சாயுதங்களை கொண்டவராகவும், பாற்கடலில் திருமகளுடன் ஆதிசேசனின் படுக்கையில் படுத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.[1] இவருடைய வாகனமாக கருடனும், அருவ வடிவமாகக் சாளக்கிராமம் கருதப்படுகிறது. திருமால்  திருமால்-நான்கு கரங்களுடன் அதிபதி காத்தல் தேவநாகரி विष्णु சமசுகிருதம் viṣṇu வகை மும்மூர்த்திகள் இடம் வைகுந்தம் ஆயுதம் சங்கு, சக்கரம், வில் மற்றும் கதாயுதம் துணை இலக்குமி  பூதேவி மற்றும் ஸ்ரீதேவியுடன், நாபிக் கமலத்தில் பிரம்மனுடன் கூடிய மகாவிஷ்ணுவின் பஞ்சலோக சிலை  தியான நிலையில் நான்கு கைகளுடன் கூடிய விஷ்ணுவின் சிற்பம், அரசு அருங்காட்சியகம், மதுரா இந்துக்கோவ...

பாரதியார் பாடல்

ஓடி விளையாடு பாப்பா!-நீ ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா! கூடி விளையாடு பாப்பா!-ஒரு குழந்தையை வையாதே பாப்பா! சின்னஞ் சிறுகுருவி போலே-நீ திரிந்து பறந்துவா பாப்பா! வன்னப் பறவைகளைக் கண்டு-நீ மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக் கூட்டி விளையாடு பாப்பா! எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு இரக்கப் படவேணும் பாப்பா! பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப் பசுமிக நல்லதடி பாப்பா! வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது மனிதர்க்கு தோழனடி பாப்பா! வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு வயலில் உழுதுவரும் மாடு, அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா! காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு-என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா! பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும் புறஞ்சொல்ல லாகாது பாப்பா! தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருன தீங்குவர மாட்டாது பாப்பா! பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம் சோர்ந்துவிட ல...

பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சி

பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சி   பியாஜே என்ற அறிவியல் மேதை தன் வாழ்நாள் முழுவதும் குழந்தைகளின் வளர்ச்சியைப் புரிந்து கொள்வதில் செலவிட்டார். அவருடைய கண்டுபிடிப்புகள் சுவையானது. குழந்தைகள் பிறப்பிலிருந்து எவ்வாறு அறிதல் திறன் வளர்ச்சி அடைகிறது என்பதை நான்கு படிநிலைகளாகப் பகுத்துள்ளார். முதல் நிலை - தொட்டு உணரும் பருவம் பிறப்பிலிருந்து - 18 மாதம் வரை இரண்டாம் நிலை - மனச் செயல்பாடுகளுக்கு முந்தைய நிலை - 18 மாதம் முதல் 7 வயது வரை மூன்றாம் நிலை - புலன்களை உணர்வதை வைத்து சிந்தித்துச் செயல்படும் மனச் செயல்பாட்டு நிலை - 7 முதல் 12 வயது வரை நான்காம் நிலை - முறையாகச் சிந்தித்து எண்ணங்களின் அடிப்படையில் செயல்படும் மனநிலை - 12 வயதிற்கு மேல் மனச்செயல்பாட்டு நிலை தொகு இப்பருவத்தில் உள்ள குழந்தைகள் பொருள்களின் தொடர்புகளை அறிந்து அவற்றின் அமைப்புகளை யோசித்துத் தங்கள் மனத்திலேயே பொருள்களின் நிலைகளை மாற்றி வைத்துப் பார்க்கத் தொடங்குகிறார்கள். சந்தேகங்கள் ஏற்படும்போது பொருள்களை அல்லது அவற்றின் அமைப்புகளை மாற்றி வைத்துக் கண்கூடாகப் பார்த்துச் சந்தேகங்களைப் போக்கிக் கொள்கின்றனர். பொருள்களின் மாற...

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள்

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 29  *    புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை ....... என்கிறோம். - மனபிம்பம் *    புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை - ஐந்து *    புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் - பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது. *    புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர்- மாண்டிசோரி *    புலன் காட்சிகள் அடிப்படை - கவனம் *    புலன் உணர்வும் பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது - புலன் காட்சி *    புலன் இயக்க நிலையின் வயதுபிறப்பு முதல் 2 வயது வரை *    புரொஜெக்ட் முறையை ஆதரித்தவர் - ஜான்டூயி *    புரூஸ் டக்மானின் ஆசிரியர் தர அளவு கோலினைப் பயன்படுத்தி கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள எப்பண்பினை ஆசிரியரிடம் அளவீடு செய்யலாம் - ஆசிரியரின் நடத்தை மற்றும் ஆக்கப்பண்பு, ஆசிரியரின் பரிவு மற்றும் ஏற்பு, ஆசிரியரி...

மனக்கவலையை எப்படி விரட்டுவது

மனக்கவலையை எப்படி விரட்டுவது? மனக்கவலையே இல்லாத மனிதன் இந்த உலகத்தில் இல்லை. எப்பொழுதும் கவலையை மனதில் வைத்து இருந்தால் தேவையற்ற குழப்பங்கள் மனதில் குடிகொள்ளும். மனக்கவலை நீங்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று கேட்டால் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இங்கு மனக்கவலை நீங்க, குரு ஒருவர் சொல்லும் குட்டிக் கதையை பற்றி தெரிந்துக் கொள்வோம். குரு ஒருவர் தன்னுடைய சீடர்களுக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சீடன் எழுந்து, 'குருவே! சில நேரங்களில் மனதில் எழும் கவலையை எப்படி போக்கி கொள்வது?" என்று கேட்டான். குரு சீடனிடம், 'இதற்கான பதிலை ஒரு கதையின் வாயிலாக உங்களுக்கு உணர்த்துகிறேன்" என்றபடி கதையை சொல்ல ஆரம்பித்தார். ஒரு காட்டில் குரங்குகள் பல கூட்டமாக வாழ்ந்து வந்தன. அக்கூட்டத்தில் சுட்டித்தனம் செய்யும் ஒரு குட்டிக் குரங்கும் இருந்தது. ஒரு நாள் அந்தக் குட்டிக்குரங்கு, பாம்பு ஒன்றைக் கண்டது. நௌpந்து, வளைந்து சென்ற அந்தப் பாம்பைக் கண்டதும், அதற்கு குதூகலமாக இருந்தது. அது ஒரு பெரிய நச்சுப் பாம்பு. குட்டிக் குரங்கானது, மெதுவாகப் போய் அந்தப் பாம்பை தன் கையில் ப...

மனிதநேயம்

மனிதநேயம் முன்னுரை: மனிதன் - இது வெறும் வார்த்தை அல்ல. இயற்கையின் உச்சகட்ட படைப்பு. பல கோடி ஆண்டு பரிணாம வளர்ச்சியின் விளைவால் இயற்கைக்குக் கிடைத்த மாபெரும் பரிசு மனிதன் ஆவான். வரம்பிலா வலிமை பெற்ற மனிதன் மனிதநேயம் எனும் மகுடத்தை சூடினால் மட்டுமே வைரமாய் மிளிர்கிறான். விளக்கம்: மனிதநேயம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது நம்மில் பலரும் இதுவரை நேரில் கூட கண்டிராத அன்னை தெரசாவும் நெல்சன் மண்டேலாவும் ஹெலன் கெல்லரும் போன்ற சான்றோர்கள் தான். மனிதநேயம் என்பது என்ன இவர்களின் கையடக்கப் பொருளா? பிறகு ஏன் இவர்கள் பளிச்சென்ற உதாரணமாகத் தோன்றவேண்டும். ஏனெனில் இவர்கள் "தனக்குப் போகத் தான் தானமும் தருமமும்" என்ற தகைமையைத் தாண்டி தன் வாழ்வை முழுவதுமாக சமூகப் பணிகளுக்காக அர்பணித்துக் கொண்டது தான். நாம் யாரும் அவ்வளவு உயரத்திற்குக் கூட செல்ல வேண்டியதில்லை. நம் கண் முன்னே நடக்கும் அன்றாட நிகழ்வுகளில் நம் உதவி தேவைப்படுவோருக்கு நம்மால் இயன்ற அளவு அதனைச் செய்யலாமே! வளர்ந்து வரும் மனிதநேயம்: மனிதநேயம் என்பது மனிதர் மனிதர் மேல் மட்டுமே கொண்டுள்ள நேயம் என்றால் அந்த வகையில் நாம் இன்று அதிக ம...

பாரதியார்

சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம். பிறப்பு :   டிசம்பர்  11, 1882 பிறப்பிடம் :  எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா) பணி :  கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர் இறப்பு :   செப்டம்பர்  11, 1921 நாட்டுரிமை: இந்தியா பிறப்பு சுப்ரமணிய பாரதியார் அவர்கள்,  சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மக...

மகாத்மா காந்தி

‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகங்களை விரிவாகக் காண்போம். பிறப்பு:  அக்டோபர்  02, 1869 இடம்:  போர்பந்தர், குஜராத் மா...

'கப்பலோட்டிய தமிழன்'வ.உ.சி

'கப்பலோட்டிய தமிழன்'வ.உ.சி நினைவு தினம் - சிறப்பு பகிர்வு நவம்பர் 18 'கப்பலோட்டிய தமிழன்'வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை மறைந்த தினம் இன்று. விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில் பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது. பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின் விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திர போராட்டத்தில் வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை 'வந்தே மாதரம் பிள்ளை ' என்று அழைத்தார்கள் தலைவர்கள். இந்தியாவை ஆங்கிலேயர் சுரண்டிக்கொண்டு இருப்பதையும்,வர்த்தகத்தில் தங்களின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை வறுமையில் வாடவிடுவதையும் வ.உ.சி உணர்ந்தார். சுதேசி நாவாய் சங்கத்தை உருவாக்கினார். ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி எனும் நிறுவன...

பெண்களுக்கெதிரான வன்முறை

பெண்களுக்கு எதிராக இவ்வளவு வன்முறைகளா...? பதபதைக்க வைக்கும் புள்ளிவிவரம்  பெண்களுக்கெதிரான சர்வதேச வன்கொடுமைகள் தடுப்பு நாளாக இன்று உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. 1960-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி மிராபெல் சகோதரிகளான மூன்று சகோதரிகள் அரசியல் செயல்பாடுகளுக்காக அந்நாட்டின் ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டனர். சமூகத்தில் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவதை கடுமையாக எதிர்த்து இவர்கள் குரல் கொடுத்து வந்தவர்கள். அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மூன்று சகோதரிகளும் ‘மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்’ என்று  உலகம் முழுவதும் அடையாளம் காணப்பட்டார்கள். 1999 டிசம்பர் 17-ல் ஐ.நா சபை கூட்டத்தில், மூன்று சகோதரிகள் இறந்த நவம்பர் 25-ம் நாளை சர்வதேச பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் தடுப்பு நாளாகப் பிரகடனம் செய்யப்பட்டது. "பெண் என்பவள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறாள்" என்று பிரஞ்சு தத்துவம் ஒன்று உள்ளது. உண்மையில் பெண் குழந்தையாகப் பிறந்தாலும், அவள் இந்தச் சமூகத்தில் பெண்ணாக வளர முடிவதில்லை. இந்தச் சமூகம் அவளை வளர விடுவதில்லை. பெண் குழந்தை என்று தெரிந்துவிட்டால் அக்குழந்தையைக் கொன்...

நட்பு

நட்பு "நட்பு என்பது சூரியன் போல் எல்லா நாளும் பூரணமாய் இருக்கும் நட்பு என்பது கடல் அலை போல் என்றும் ஓயாமல் அலைந்து வரும் நட்பு என்பது அக்னி போல் எல்லா மாசுகளையும் அழித்து விடும் நட்பு என்பது தண்ணீர் போல் எதில் ஊற்றினாலும் ஓரே மட்டமாய் இருக்கும் நட்பு என்பது நிலம் போல் எல்லாவற்றையும் பொறுமையாய் தாங்கிக் கொள்ளும் நட்பு என்பது காற்றைப் போல் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும்

நண்பா உனக்கொரு வெண்பா

நண்பா உனக்கொரு வெண்பா ஊரைக் குடிக்கும் உயிர்க்கொல்லி நோயொன்று பாரைக் குடித்துவிடப் பார்க்கிறதே - பாரடா வையத்தில் மானுடம் வாழுமோ என்னுமோர் அய்யத்தில் உள்ளோம் அடா! போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில் பாதை வழுவிய பாலுறவில் - காதைக் கழுவாத ஊசி கழிவுரத் தத்தில் நுழையும் உயிர்க்கொல்லி நோய்! இடைகாட்டி மெல்ல இளைய தனத்தின் எடைகாட்டி இன்பம் இழைப்பாள் - மடையா கொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை விலைமகள் ஆசை விடு! கண்ணுக்குத் தோன்றாத காமக் கிருமிகளோ புண்ணுக்குள் சென்று புலன்கொல்லும் - கண்ணா முறையோடு சேராத மோகம் பிறந்தால் உறையோடு போர்செய்தே உய்! கரைமீறிச் சேர்ந்தாடும் காமக் கலப்பில் உறைமீறி நோய்சேர்வ துண்டே - உறைநம்பிக் கம்மாக் கரையோ கடற்கரையோ தேடாமல் சும்மா இருத்தல் சுகம்! தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை வேகையிலும் விட்டு விலகாதே - ஆகையினால் விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு கற்பனையை வீட்டுக்குள் காட்டு! கலவிக்குப் போய்வந்த காமத்து நோயைத் தலைவிக்கும் ஈவான் தலைவன் - கலங்காதே காவலனாய் வாய்த்தவனே கண்ணகிக்கு நோய்தந்தால் கோவலனைக் கூசாமல் கொல்! ஓரினச் சேர்க்கை உறவாலே மானுடத்துப் பேரினச் சேர்க்க...

செய்யும் உதவி வீணாகாது

செய்யும் உதவி வீணாகாது ! பொன்வேந்தன் என்னும் ராஜாவிடம், முத்தன் என்னும் இளைஞன் வேலை செய்து வந்தான். அந்த ராஜாவுக்கு பறவைகள் பேசும் பாஷை நன்றாக தெரியும். இதை அறிந்த முத்தன், நம் அரசருக்கு மட்டும் எப்படி பறவைகள் பேசும் பாஷை தெரியும் என்று வியப்படைந்தான். ராஜாவுக்கு தினமும் முத்தன் தான் சாப்பாடு பரிமாறுவான். ராஜாவின் உணவில் ஒரு பகுதி மட்டும் தனியாக தனிப் பெட்டியில் ராணியே சமைத்துத் தருவாள். ஒருநாள் முத்தன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அந்த பெட்டிக்குள் ஏதோ துண்டு துண்டுகளாக சமைத்து வைக்கப்பட்டிருந்தன. இது என்னவாக இருக்கும் என்று ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டு பார்த்தான். அதை சாப்பிட பின் முத்தனுக்கு பறவைகள் பேசும் பாஷை புரிய ஆரம்பித்தது. அதன்பின் முத்தன் அரண்மனையில் இருந்து குதிரையில் கிளம்பிச் சென்றான். போகும் வழியில் எறும்புகள் சாரை சாரையாக செல்வதைப் பார்த்தான். அப்பொழுது எறும்பின் தலைவன் முத்தனை பார்த்து, குதிரையை எங்களை மிதிக்காதவாறு ஓட்டிச் செல்லுங்கள் என்றது. முத்தனும் அவ்வாறே ஓட்டிச் சென்றான். அடுத்து, போகும் வழியில் குளம் ஒன்று தென்பட்டது. அக்குளத்தின் அருகில் மீன்கள் ...

சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு

சபரிமலை ஐயப்பன் கோவில்!  ஐயப்பன், சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வருபவன். ஐயப்பன் வழிபாடு கேரளா, தமிழ்நாடு, இலங்கை ஆகிய இடங்களில் முதன்மை பெறுகிறது. சபரிமலை, கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மகிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என கூறப்படுகிறது. அமைவிடம் : பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பனின் கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் தை மாதம் முதல் நாள் வரை, ஏறத்தாழ இலட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். வரலாறு : கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார். அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி...

மகத்துவமும், மருத்துவமும் நிறைந்த வாழைப்பழம்

மகத்துவமும், மருத்துவமும் நிறைந்த வாழைப்பழம்! வாழைப்பழம் : வாழைப்பழம், நம் உடலில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. விஞ்ஞானிகளும், சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர் தரமான உணவு, வாழைப்பழம் தான் என்கிறார்கள். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் 'சி" பல் ஈறுகளையும், எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும், சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சமநிலையில் இருக்கும். உடலில் பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட முடியும். வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல, பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. பச்சை வாழை அல்சர், இரத்த சோகை, காசநோய், மலச்சிக்கல், மூலநோய் குறைபாடு மற்றும் வயிற்றுப்போக்கு நோயை குணப்படுத்தும். இது அதிக அளவில் சக்தியைத் ...

பழமொழி விளக்கம்

  தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது! விளக்கம் : மகாபாரதத்தில் அர்ஜுனன் தன்னுடைய வில் திறத்தால்தான் வெற்றி கிடைத்தது என்று நினைத்து வந்தான். ஒரு தடவை கர்ணன் எய்த பிரம்மாஸ்திரத்திலிருந்து அர்ஜுனனை கிருஷ்ணன் காப்பாற்ற தேரின் கால் சக்கரத்தை நிலத்தில் புதையுமாறு கிருஷ்ணன் அழுத்தியதால் அர்ஜுனனின் தலையை நோக்கி வந்த பிரம்மாஸ்திரம் அவனது தலைப்பாகையை மட்டும் பறித்துக்கொண்டு போனது. இதுவே இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும். விண் பொய்த்தால் மண் பொய்க்கும்! விளக்கம் : விவசாயத்திற்கு மழையையே நம்பியிருக்கும் காலத்தில் பருவ மழையை நம்பி பயிர் செய்வர். உரிய காலத்தில் வரவேண்டிய மழை பெய்யாமல் பொய்த்துப்போனால் பயிர் வளராமல் உரிய விளைச்சல் இல்லாமல் மண்ணும் பொய்த்துப்போகும் கிருஷ்ணன் அழுத்தியதால் அர்ஜுனனின் தலையை நோக்கி வந்த பிரம்மாஸ்திரம் அவனது தலைப்பாகையை மட்டும் பறித்துக்கொண்டு போனது. இதுவே இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும். விண் பொய்த்தால் மண் பொய்க்கும்! விளக்கம் : விவசாயத்திற்கு மழையையே நம்பியிருக்கும் காலத்தில் பருவ மழையை நம்பி பயிர் செய்வர். உரிய காலத்தில் வரவேண்டிய மழை பெய...

பழமொழி விளக்கம்

அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்! விளக்கம் : சில குழந்தைகள் பிறக்கும்போதே நோய்களின் அறிகுறியுடன் பிறக்கின்றன. உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் பகுதிகள் நீல நிறமாக இருப்பின் குழந்தை செவ்வாப்பு என்னும் நோயால் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். இதற்குரிய மருந்தாகக் கழுதைப் பால் புகட்டப்படுகிறது என்பதனை இப்பழமொழி குறிக்கிறது. ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ! விளக்கம் : ஆவாரைப் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து, இடித்து வைத்துக் கொண்டு தேநீர், காப்பித்தூள் இவைகளுக்குப் பதிலாக உபயோகித்து வர உடல் வறட்சி, நீரிழிவு நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாக்குவதால், ஆவாரைப் பூவின் மகத்துவத்தைக் குறிக்க வந்ததே இந்த பழமொழியாகும்.

நாலடியார் - 14.கல்வி

நாலடியார் - 14.கல்வி குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு. 131 தலைமயிரைச் சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும், முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகும் அழகும் உண்மை அழகல்ல. மனத்தளவில் உண்மையாக நடந்துகொள்கிறோம் என்னும் நடுவு நிலையாம் ஒழுக்க வாழ்க்கையைத் தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகாம்.  இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால் தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால் எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து. 132 கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும்; பிறர்க்குத் தருவதால் குறையாது; (கற்றவர்) புகழை எங்கும் பரவச் செய்யும்; (தாம்) உயிரோடு இருக்கும்வரை அழியாது. ஆதலால் எந்த உலகத்திலும் கல்வியைப் போல அறியாமையைப் போக்கும் மருந்தை யாம் கண்டதில்லை.  களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் கடைநிலத்தோ ராயினும் சுற்றறிந் தோரைத் தலைநிலத்து வைக்கப்படும். 133 களர் நிலத்தில் உண்டான உப்பைச் சான்றோர், நல்ல நன்செய் நிலத்தில் வி...